Showing posts with label Tamil Firefox. Show all posts
Showing posts with label Tamil Firefox. Show all posts

Firefox பிரச்சனைக்கு ஒரு தற்காலிக தீர்வு

Firefox இனை பயன்படுத்தி பழகிவிட்டால் மறுபடி IE பயன்படுத்துவதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. (இது புரிந்துதானோ என்னவோ மைக்ரோசொப்ட் Forefox இனை அப்படியே ஈயடிச்சான் காப்பி அடித்து IE7 ஆக வெளியிடுகிறது) லினக்சில் கூட Epiphany ஓரளவு மாற்றாக இருந்தாலும் அதுவும் கூட மொசில்லா அடிக்கட்டுமானத்திலேயே இயங்குகிறது.


எழிலூட்டம் செய்யப்பட்ட (குறிப்பாக Justify) தமிழ் தளங்களை பார்வையிடும்போது Mozilla குடும்ப உலாவிகள் எழுத்துக்களை குதறிப்போட்டுவிடுகின்றன. வின்டோஸ் காரர்கள் என்றால் பரவாயில்லை அந்த பக்கங்களை மட்டும் IE இல் பார்த்துவிடலாம் அல்லது IE tab நீட்சியை நிறுவி சமாளிக்கலாம். லினக்ஸ்காரர்களுக்கு வழியில்லை. அநேகமாக லினக்ஸின் எல்லா உலாவிகளும் மொசில்லா அடிக்கட்டுமானத்தில்தான் இயங்குகின்றன். கான்கரரில் கூட இதே பிரச்சனை இருக்கிறது. என்னசெய்வது?


இன்றைக்கு காலை மின்னஞ்சல்கள் பார்க்கும்போது தமிழ்லினிக்ஸ் மடலாடற்குழுமத்திலிருந்து வந்த மடல் ஒன்று இதற்கான தீர்வை சொல்கிறது.அநேகமாக இந்த பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படும் தமிழ் வலைப்பதிவாளர்களுடன் அந்த தீர்வை பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்து இந்த பதிவை இடுகிறேன்.


(இக்குறிப்புக்கள் யாவும் சரவணனின் ஆங்கில வலைப்பதிவிலிருந்து எடுக்கப்பட்டவை)


  1. 1. firefox உலாவியை திறந்துவைத்துக்கொள்ளுங்கள்
  2. 2. இந்த நீட்சியை நிறுவிக்கொள்ளுங்கள்
  3. 3. உலாவியை மூடி திரும்ப திறந்துவைத்துக்கொள்ளுங்கள்
  4. 4. இந்த பக்கத்தை திறந்துவைத்துக்கொள்ளுங்கள்
  5. 5. tools -> new user script என்பதை தெரிவு செய்யுங்கள். திறந்துவைத்திருக்கும் பக்கத்திலுள்ள நிரல் நிறுவப்பட்டு வெற்றிச்செய்தி காண்பிக்கப்படும்.
  6. 6. firefox இனை மீள ஆரம்பித்து பக்கத்தை திறந்தீர்களானால் எழுத்துக்கள் அழகாக தெரியும். எந்த பிரச்சனையும் இல்லை. (உலாவியின்கீழ்பட்டையில் உள்ள சிரிக்கும் குரங்கு உருவம் சிரித்துக்கொண்டிருக்கிறதா என்பதை கவனியுங்கள்)
  7. 7. இப்பொழுது புதிய பிரச்சனை எல்லா வலைத்தளங்களின் எழிலூட்டங்களும் மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் உங்களுக்கு சில குறிப்பிட்ட தளங்களுக்கு மட்டுமே இம்மாற்றத்தை செய்யவேண்டும். என்னசெய்வது?
  8. 8. tools -> manage user scripts என்பதை தெரிவு செய்யுங்கள்
  9. 9. http* ftp* என இருக்கும் தெரிவுகளை எல்லாம் நீக்கிவிட்டு நீங்கள் பார்க்கவிரும்பும் வலைப்பக்க முகவரியை சேர்த்துக்கொள்ளுங்கள்.
  10. 10 குறித்த வலைத்தளத்தின் எல்லா பக்கங்களுக்கும் இவ்வசதி வேண்டுமானால், வலைத்தளத்தின் முதன்மை முகவரியை இட்டு அதன் முடிவில் நட்சத்திரக்குறி இடவேண்டும். எடுத்துக்காட்டாக, http://tamilbasic.blogspot.com/*




இந்த வார தமிழ்மணம் நட்சத்திரத்தின் வலைப்பதிவை எப்படி சரியாக்கிப்பார்த்தேன் என்பதை படங்களில் பார்த்துக்கொள்ளுங்கள்.

இது ஏற்கனவே பதியப்பட்ட கட்டுரையாகும். அவை சுடப்பட்டு இங்கு
பொரிக்கப்பட்டுள்ளது.

சுட்ட இடம் : http://tamilgnu.blogspot.com/2006/09/firefox.html

தமிழ் ஃபயர்ஃபாக்ஸின் சோதனைப்பதிப்பு 2 ....

அணைவருக்கும் வணக்கம். என்னுடைய வலைப்பதிவான http://logesh.wordpress.com ஒரு சில காரணங்களால் தடைசெய்யப்பட்டுவிட்டது. (என்னுடைய புதிய ஆங்கில வலைப்பதிவை இங்கே காணலாம் : http://thooral.info/blog/logesh/) எனவே புதியதாக மீண்டும் ஒரு வலைப்பதிவை தொடங்கி தமிழ்வலைப்பதிவுகள், தமிழ் மணம் போன்றவற்றில் இணைப்பதாக இல்லை. எனவேதான் நமது ஆல்பர்டுடன் இணைந்து அவரது பதிவிலேயே என்னுடைய படைப்புகளையும் போடலாம் என முடிவுசெய்துள்ளேன். சர் விசயத்திற்கு வருவோம். கடந்த 14- ஆம் தேதி ஆல்பர்ட் அவர்கள் என்னுடைய ஃபயர்ஃபாக்ஸிற்கான மொழிபெயர்ப்பை இங்கு அறிவித்திருந்தார். இன்னும் வேலைகள் முழுமையாக முடியாத்தால் நான் முதலில் என்னுடைய படைப்பை Portable Firefox யை கொண்டே வெளியிட்டிருந்தேன். ஏனென்றால் இதனை சோதிக்கும்பொழுது கணினியில் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் ஃபயர்ஃபாக்ஸிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதே. ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த சோதனைப்பதிப்பில் பல வார்த்தைகள் மொழிபெயர்க்கப்படாமல் இருந்தன. இப்பொழுது கிட்டத்தட்ட முழுமைப்பெற்றுவிட்டது. தமிழ் ஃபயர்ஃபாக்ஸ் சோதனைப்பதிப்பு 2 ஐ இனி http://tamilfirefox.com தளத்திலிருந்து பதிவிறக்க ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது. மேலும் தானாக நிறுவிக்கொள்ளக்கூடிய மொழிப் பொட்டலத்தை உருவாக்குவதே என்னுடைய அடுத்த எண்ணம். இதனை எப்படி எளிமையாக செய்வது என்று அறிந்தவர்கள் உதவினால் வேலை மிக விரைவில் முடிக்கப்பட்டுவிடும். நன்றி....

ஃபயர்ஃபாக்ஸ் உலாவியை எப்படி

ஃபயர்ஃபாக்ஸ்(Firefox) உலாவியை எப்படி சிறப்பாக உபயோகிப்பது ?


முன்பெல்லாம் இணையத்தை உலாவ விண்டோஸ் கணினியில் எல்லோரும் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைத் தான் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போதோ, ஃபயர்ஃபாக்ஸ் உலாவியையே அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு காரணம், முதலில் அது ஒரு திறவூற்று மென்பொருள் என்பதாகும். மேலும் இந்த உலாவியில் மட்டும்தான் (தற்பொழுது பல திறவூற்று உலாவிகள் உள்ளன) அதனுடைய முகப்பை நாம் விரும்பும் மொழியில் பயன்படுத்தும் வசதி, மேலும் முக்கியமாக நீட்சிகளின் உதவியுடன் மேலும் பல பயன்பாடுகளை உலாவியின் உள்ளிருந்தே செய்யும் வசதி உள்ளது.
சரி, இந்த திறவூற்று உலாவியான ஃபயர்ஃபாக்ஸை எப்படி திறம்பட செயல்படுத்துவது என்று பார்ப்போம்.
மேலும் படிக்க…