Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

தமிழ் ஃபயர்ஃபாக்ஸின் சோதனைப்பதிப்பு 2 ....

அணைவருக்கும் வணக்கம். என்னுடைய வலைப்பதிவான http://logesh.wordpress.com ஒரு சில காரணங்களால் தடைசெய்யப்பட்டுவிட்டது. (என்னுடைய புதிய ஆங்கில வலைப்பதிவை இங்கே காணலாம் : http://thooral.info/blog/logesh/) எனவே புதியதாக மீண்டும் ஒரு வலைப்பதிவை தொடங்கி தமிழ்வலைப்பதிவுகள், தமிழ் மணம் போன்றவற்றில் இணைப்பதாக இல்லை. எனவேதான் நமது ஆல்பர்டுடன் இணைந்து அவரது பதிவிலேயே என்னுடைய படைப்புகளையும் போடலாம் என முடிவுசெய்துள்ளேன். சர் விசயத்திற்கு வருவோம். கடந்த 14- ஆம் தேதி ஆல்பர்ட் அவர்கள் என்னுடைய ஃபயர்ஃபாக்ஸிற்கான மொழிபெயர்ப்பை இங்கு அறிவித்திருந்தார். இன்னும் வேலைகள் முழுமையாக முடியாத்தால் நான் முதலில் என்னுடைய படைப்பை Portable Firefox யை கொண்டே வெளியிட்டிருந்தேன். ஏனென்றால் இதனை சோதிக்கும்பொழுது கணினியில் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் ஃபயர்ஃபாக்ஸிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதே. ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த சோதனைப்பதிப்பில் பல வார்த்தைகள் மொழிபெயர்க்கப்படாமல் இருந்தன. இப்பொழுது கிட்டத்தட்ட முழுமைப்பெற்றுவிட்டது. தமிழ் ஃபயர்ஃபாக்ஸ் சோதனைப்பதிப்பு 2 ஐ இனி http://tamilfirefox.com தளத்திலிருந்து பதிவிறக்க ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது. மேலும் தானாக நிறுவிக்கொள்ளக்கூடிய மொழிப் பொட்டலத்தை உருவாக்குவதே என்னுடைய அடுத்த எண்ணம். இதனை எப்படி எளிமையாக செய்வது என்று அறிந்தவர்கள் உதவினால் வேலை மிக விரைவில் முடிக்கப்பட்டுவிடும். நன்றி....

தமிழ் வ.பதிவுகளின் வரலாறு...

இங்கே தமிழ் வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்களாக பெரும்பாலானோர்
வெளிநாடு வாழ் தமிழர்களாகவே இருக்கின்றனர். அதிலும் ஈழத்துத் தமிழ்ர்கள் தான் அதிகம். மற்றபடி ஒரு 23% மே தமிழ்நாட்டில் இருந்து தமிழில் வலைப்பதிக்கின்றனர். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இங்கே ஒரு சாதாரண மனிதன் அங்கே இங்கே ஓடி சுறுசுறுப்பாக சம்பாதிக்கும் போதே
கையில் காசு நிற்பதில்லை. அப்படி இருக்க இங்கே வருவது கடினம் தான்.

ஆனால் "இவ்வளவு கடினமாகத் தெரியும் இந்த தமிழ் வலைப்பதிவுகள் உலகத்திற்கு மிகப் பெரிய வரலாரே இருக்கிறது" என்று
காலச்சுவடு இதழில் அ. முத்துலிங்கம் தெள்ளத்தெளிவாக எழுதி இருக்கிறார்.


தமிழ் வலைப்பதிவுகளின் தொடக்கத்தில் சுரதா யாழ்வாணனின் எழுத்துறு மாற்றிகள் ஏற்படுத்திய புரட்சி என்று புரியும் படிஅந்தக் கட்டுரையை எழுதியுள்ளார்.

அக்கட்டுரையை படிக்க இங்கெ சொடுக்கவும்.