தமிழில் வலைப்பதிவு தொடங்குதல் என்பது சிலருக்கு சற்று கடினமாகவே இருக்கிறது. இதன் சுமையைப் போக்க, முன்னரே தயார் செய்யப்பட்ட கருவிகள் நமக்கு உதவும். அதன்படி இந்த ப்ளாக்கருக்கான (Blogger.com) தமிழ் அடைப்பலகையை (Tamil Template) இங்கு வெளியிடுகிறேன்.
இந்த அடைப்பலகை மூலம் எளிதாக தமிழில் வலைப்பதிவு தொடங்கலாம். இதனுடைய மிக முக்கியமான நன்மைகள் கீழெ கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க...
தமிழ் வலைப்பதிவு அடைப்பலகை வெளியிடப் படுகிறது
வலைப்பூ வண்ணமயமாக இலவச கருவிகள்
சில நேரங்களில் நாம் நினைத்தவாறு நமது வலைப்பதிவுகளின் அடைப்பலகைகள் (Templates) அமைவதில்லை. ஆனால் அதை நாம் வண்ணமயமாக மாற்றி அமைக்கலாம். நமது வலைப்பதிவின் தொடுப்புகளின் நிறத்தை மாற்றி அமைக்கலாம். மேலும் வலைப்பதிவின் பின்புறத்தையும் மாற்றி அமைக்கலாம். அதற்கு ISDN*tek என்ற நிறுவனத்தினர் Rainbow Color Browser என்ற ஒரு செயலியை வழங்குகின்றனர். அதில் நமக்குத் தேவையான வண்ணத்தை தேர்வு செய்த பிறகு அதன் குறிமுறையும் copy செய்து கொள்ளலாம். பிறகு அதன் குறிமுறையை Template பகுதியில் தேவையான இடத்தில் ஒட்டி நிறங்களை மாற்றலாம். அவ்வாறு செய்த பிறகு preview பார்த்த பின்பு பதிக்கவும். அதன் மாதிரி வடிவம்.
உதாரணமாக என்னுடைய வலைப்பதிவைப் பாருங்கள். புதிய வார்ப்புகள் தந்த இந்த படையப்பா அடைப்பலகையை இவ்வாறு மாற்றி உள்ளேன்.
மேலும் இவ்வலை தளத்தினர் பல இலவச கருவிகளைத் தருகின்றனர். இவ்வலைக்குச் செல்ல இங்கே சொடுக்கவும். Click here to visit this site
இலவச Feedback Form: பதிலுரைப் படிவம்
இந்த தளத்திற்குச் சென்று தேவையான தகவல்களைப் பூர்த்தி செய்து படிவத்தை (Form) நிறைவு செய்யுங்கள். அங்கே உங்கள் விருந்தினர்கள் பற்றிய பல தகவல்களை தருமாறு படிவம் தயாரிக்கலாம். அதாவது
Ask for a phone number?
Ask for physical address?
சருகுவிலிருந்து தமிழ் இணைய நுட்பங்கள் இறக்குமதி
சருகுவில் எழுதிய முதல் பதிவே எப்படி தமிழில் வலைப்பதிவு உருவாக்குவது என்பன பற்றித்தான். இப்போது கணினி/இணைய நுட்பங்களுக்கு (தமிழ்மணத்தில்: அறிவியல் நுட்பம்) ஏற்ப வலைப்பதிவு ஏற்படுத்தியிருப்பதால் இங்கே அந்த பழைய பதிவுகளை இறக்குமதி செய்கிறேன்.
- இயங்கு எழுத்துருவுடன் கூடிய இலவச தமிழ் வலைப்பதிவு: கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் எழுதியிள்ளேன். பயனடைந்தவர்கள் இந்த வலைப்பதிவிற்கு இணைப்புக் கொடுக்கலாம்.
- தமிழில் மின்னஞ்சல் அனுப்புவதுஎப்படி?
தமிழில் தட்டச்சு செய்ய ஆங்கில தட்டச்சு தெரிந்தாலே போதும்! - இயங்கு எழுத்துறு என்றால் என்ன?
- இணையக் கலைக் களஞ்சியம்: மைக்ரோசாப்டின் புதிய வருமானம்
- இலவச பிடிஎஃப் மென்பொருள்
- இலவச பதிவிறக்க மென்பொருள்: Free Download manager
இனிமேல் கணினி/இணைய நுட்பம் தொடர்பான பதிவுகளை இங்கேயே படிக்கலாம்.
(தற்போது அனைத்து மாற்றங்களும் சரிசெய்யப்பட்டு பதியப் பட்டுவிட்டது)