Showing posts with label அரசுத் துறைகள். Show all posts
Showing posts with label அரசுத் துறைகள். Show all posts

மக்களை ஏமாற்றும் BSNL லும் அதன் குதிரை(...!) வேகமும்..!

இந்தியாவை தன்னுடைய கம்பிகளாலும் காற்றலைகளாலும் மற்ற நாடுகளுடன் இணைக்கும் ஒரே அரசுத்துறை நிறுவனம் தான் இந்த BSNL.

உண்மையில் தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சிக்குப் பின்பே இந்தியாவால் மற்ற நாடுகளுடன் (சில துறைகளில் மட்டும் தான்) போட்டி போடும் அளவிற்கு வந்துள்ளது.

இந்தத் துறையின் BSNL தான் இந்தியாவெங்கும் தொலைப்பேசி முதல் இணைய இணைப்பு வரை வழங்கி வருகிறார்கள். இவர்க்ளோடு சில தனியார் துறையினரும் இந்தச் சேவையை வழங்கி வருகிறார்கள்.

இப்போது பிரச்சணையே இந்த BSNL ன் இணைய இணைப்புத்தான்.

SancharNet, DataOne, NetOne என்ற பெயர்களில் இணைய இணைப்பை தங்களுடய வாடிக்கையாளர்களுக்கு BSNL வழங்கி வருகிறது.

சென்ற நாட்களில் இவர்கள் DataOne என்ற (Broad Band Internet Connection) அகன்ற அலைவரிசை கொண்ட சேவையை புதிதாகத் தொடங்கினார்கள். இச்சேவை தொடங்கப் பட்டபோதே நிறைய குழப்பங்கள். அதாவது சீனாவில் வேண்டாம் என்று தூக்கி எரியப்பட்ட "செப்பு கம்பி முறை" யைப் பின்பற்றி இவர்கள் இங்கே அகன்ற அலைவரிசைக்கு பூஜை போட்டார்கள். அதுவும் இது நகரங்களில் மட்டுமெ இந்தச் சேவையைப் பெற முடியும். ஆனால் இச்சேவையை வாங்கிய அனைவருக்கு பெரிய ஏமாற்றாம் தான் மிஞ்சியது. அகன்ற அலைவரிசை என்று வழங்கப்பட்ட இச்சேவை குறுகிய சேவையாக மாறியதுடன் மட்டுமல்லாமல் அடிக்கடி இணைப்பு துண்டிக்கப் பட்டு எரிச்சலை அடையச் செய்தது.

இந்த DataOne என்ற (Broad Band Internet Connection) அகன்ற அலைவரிசை கிடைக்கப் பெறாதவர்கள் (கிராமங்களில் உள்ளவர்கள்) SancharNet மற்றும் NetOne என்ற சேவையைப் பெற்றுக் கொள்ளலாம். இச்சேவை வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது தந்து கொண்டு இருக்கிறது. BSNL ன் தரைவழி இணைப்பு உள்ளவர்கள் இந்த 2 சேவைகளையும் பெற முடியும். இதில் SancharNet என்பது Pre Paid முறையாகும். NetOne என்பது Post Paid முறையாகும்.

SancharNet என்பதில் ரூபாய். 280 முதல் 500 வரை உள்ள 50 மணி மற்றும் 100 மணி நேர அட்டைகள் உள்ளன. இதில் ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களைத் தவிர மற்ற நாட்களில் இணைய இணைப்பு செய்தால் அந்த மணித்துளிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படும். அப்போது ஒரு நிமிடத்திற்கு 1 ரூபாய் என்று கட்டணம் நம்முடைய தொலைப்பேசி கட்டணத்தில் ஏறிவிடும். அப்படி 1 மணிநேரம் இணைய இணைப்பில் இருந்தால் 60 ரூபாய். ஆனால் வருகிற இணைய வேகமோ 28 KBs மட்டும் தான்.

இந்த இணைய இணைப்பை வைத்துக் கொண்டு சாதாரணமாக உங்களுக்கு வந்திருக்கிற 1 மின்னஞ்சலைப் படிக்க உங்களுக்கு கிட்டத்தட்ட 7 நிமிடங்கள் பிடிக்கும். அதைப் படிக்க மட்டும் தான் 7 நிமிடங்கள். அதற்கு நீங்கள் பதில் கடிதம் வேறு அனுப்புவீர்கள். அப்படி என்றால் தொலைப்பேசிக் கட்டணம் எவ்வளவு வரும் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

இதே போலத்தான் NetOne என்ற முறையும். இதில் நேர அட்டைகள் வாங்கத் தேவையில்லை. நேரடியாக தொலைப்பெசி வழியாக இணைய இணைப்பைப் பெறலாம். இங்கே 1 நிமிடத்திற்கு 10 பைசா என்று தொலைப்பேசி கட்டணம் ஏறும். வேகமோ அதே 28 KBs மட்டும் தான். அதிலும் இந்த 2 முறைகளும் இணைய இணைபில் இருந்தால், அப்போது நமக்கு வரவேண்டிய தொலைப்பெசி அழைப்புகளும் வராது.

இந்த மவுஸ் எரிச்சலில் (வயிற்று எரிச்சல் இல்லை) யாரோ ஒரு நபர் தன்னுடைய வ.பதிவில் இந்தியாவெங்கும் 2010 ல் இலவசமாகவே 2 MBs வேகத்தில் இணைய இணைப்பு தரப் போகிறார்க்ள் என்று ஒரு பதிவு போட்டிருந்தார். தயவு செய்து அந்த மாதிரி மட்டும் கணவு கண்டு விடாதீர்கள். கட்டணச் சேவைக்கே 28KB தான் தர முடிகிறது. அப்படியிருக்க இந்தியாவெங்கும் எனும் போது சாத்தியமில்லை.

அப்படியே BSNL அலுவலகத்தை தொடர்பு கொண்டால் சில நெரங்களில் அவர்கள் தந்திருக்கும் எண்ணுக்கு அழைப்பு போகாது அல்லது போனாலும் அதற்கு பதிலே இருக்காது.

தனியார் நிறுவனங்கள் எப்படி...?

இவர்கள் மட்டும் யோக்கியம் இல்லை. இவர்கள் மகா திருடர்கள். அடிக்கடி இணைய இணைப்பு துண்டிக்கப் படுவது என்பது இங்கே சகஜம். அதற்கு இவர்களின் வாடிக்கையாளர் சேவைமையத்தைத் (Customer Care) தொடர்பு கொண்டால் மறுமுணையில் ஒரு பெண் பேசுவார்.

"இப்ப சரி செய்துடறோம் சார். வெயிட் பண்ணுங்க. "

என்று அந்தப் பொண்ணு பேசும். உடனே நம்மாளு தன்னுடைய கெத்த காண்பிக்க ஏதாவது பேசிவிட்டு தொலைப்பேசியை வைத்துவிடுவார். அவ்வளவுதான் அவருக்கு இனிமேல் இணைய இணைப்பு துண்டிக்கப் பட்டால் ரொம்ப சந்தோசம்.

இப்படித்தான் 50% வாடிக்கையாளர் சேவைமையங்கள் மக்களை ஏமாற்றவே ஏற்படுத்தப் பட்டுள்ளன. இது தான் தனியார் நிறுவனங்களின் தந்திரம். 30% Call Center களில் இந்த மக்களை ஏமாற்றும் வேலை தான் நடக்கிறது.

இந்தப் பிரச்சணையால் பாதிக்கப் பட்டவர்கள் நிச்சயமாக அதிகம் பேர் இருப்பீர்கள். மறந்துவிடாமல் உங்கள் (ஆதங்கங்களை) கருத்துக்களை (Comments) இங்கே விட்டுச்செல்லுங்கள்.

தமிழ் நாடு BSNL தொலைத்தொட்ர்பு வட்டத்திற்குச் செல்ல : http://tamilnadu.bsnl.co.in/

BSNL NetOne ன் ஏமாற்று விளம்பரத்தைப் பார்க்க: http://tamilnadu.bsnl.co.in/cbtnetone.htm