ஏற்கனவே மின்னஞ்சல் படிப்பதன் மூலமாக காசு சம்பாதிக்கலாம் என்று psv இந்தப் பதிவில் கூறி இருக்கிறார். ஆனால் நான் அதற்கு முன்பே இன்னொரு தளத்தில் உருப்பினராக இருக்கிறேன்.
இவர்கள் ஒரு விளம்பர மின்னஞ்சல் படிக்க இரண்டு செண்டுகள் கொடுக்கிறார்கள். முதலில் சேர்ந்தவுடன் ஊக்கத்தொகை $10 கொடுக்கிறார்கள். $25 கள் வந்தவுடன் நமக்கு காசோலை அனுப்புவார்கள்.
இவர்களின் மின்னஞ்சல் உங்கள் மின்னஞ்சல் பெட்டிக்கு (Inbox) வரும் போது *HITS4PAY - PAID e-MAIL* என்று பொருளாக (Subject of the e-Mail) இருக்கும். அனுப்புனர் பெயர் Hits4pay என்று இருக்கும்.
இதில் உங்களுக்கு வரும் மின்னஞ்சலை எப்படிப் படிப்பது? மற்றும் என்ன செய்ய வேண்டும் என்பதை பட விளக்கமாக கீழே விளக்கியுள்ளேன்.
(முதலில் இங்கே சென்று Sign Up Free என்பதைக் கிள்ளி ஒரு கணக்கு உங்களுக்காக உருவாக்கிக் கொள்ளுங்கள். முக்கியமாக விளம்பர மின்ஞ்சலைப் படிக்க சரியான மின்னஞ்சல் முகவரியைத் தர வேண்டும். நான் நீண்ட நாட்களாக இதைப் பயன்படுத்தி வருகிறேன். எந்தக் குறைபாடும் கிடையாது. அதனால் துணிந்து மின்னஞ்சல் முகவரி கொடுக்கலாம். ) இனி பட விளக்கங்களைப் பார்க்கலாம்.
1. இப்படித்தான் உங்கள் மின்னஞ்சல் பெட்டியில் (Inbox) அந்த விளம்பர மின்னஞ்சல் வந்தவுடன் தோன்றும். அதைத் திறந்து கொள்ள வேண்டும்.
2. இது அந்த விளம்பர மின்னஞ்சலைத் திறந்தவுடன் தோன்றும் பகுதி. இங்கே அதன் இறுதிப் பகுதியை மட்டும் காட்டியுள்ளேன். இதில் "Click Here To LOGIN NOW" என்பதைக் சொடுக்கினால் ஒரு புதிய திரை திறக்கும். அதில் ஏற்கனவே உங்கள் பயனர் பெயர் (User Name) குறிப்பிட்டிருக்கம். நீங்கள் உங்கள் கடவுச்சொல்லை (Password) கொடுத்து உள் நுழைய வேண்டும்.
3. அவ்வாறு நீங்கள் உள் நுழைந்தவுடன் கீழ்வருமாறு, வந்திருக்கிற அனைத்து விளம்பர மின்னஞ்சல்களும் காட்டப்படும்.4. இவ்வாறு அந்தப் பக்கத்தின் இறுதியில் (அதாவது ஒவ்வொரு விளம்பர மின்னஞ்சலின் இறுதியிலும்) ஒரு இணைப்பு கொடுத்திருப்பார்கள். அதைக் கண்டிப்பாகச் சொடுக்க வேண்டும்.
5. இதன் பின்பு நீங்கள் சொடுக்கிய அந்த இணைப்பு கீழ்வருமாறு விளம்பர மின்னஞ்சலை உங்களுக்குக் காட்டும். இப்பதான் நீங்கள் விளம்பர மின்னஞ்சலைப் படிக்கிறீர்கள். சிறிது நேரம் பொறுக்கவும்.
6. சரியாக 1 நிமிடங்களுக்குப் பிறகு (இணைய வேகத்தைப் பொறுத்து) கீழ்வருமாறு உங்கள் கணக்கில் 2 செண்டுகள் வரவு வைக்கப் பட்டது என்ற செய்தியைப் பெறுவீர்கள். அடுத்து விளம்பர மின்னஞ்சலைப் படிக்க "Click here to view the next advertisement" என்ற பொத்தானை அழுத்திச் செல்லவும். இவ்வாறு நீங்கள் வந்திருக்கிற ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் செய்தாக வேண்டும்.
7. இது எனக்கு ஒரு நாளில் வந்த 4 விளம்பர மின்னஞ்சல்களைப் படித்ததற்கான வரவு.
குறிப்பு:
தொடர்ந்து விளம்பர மின்னஞ்சல்கள் வர உங்களுடைய விருப்பத்தேர்வுகள் (Interest Categories) கீழ்வருமாறு இருக்க வேண்டும். அதன் பொறுத்தே உங்களுக்கு அவர்கள் விளம்பர மின்னஞ்சல்களை அனுப்புவார்கள்.
உங்களுடைய Hits4pay கணக்கினுள் நுழைந்து கொள்ளுங்கள். அங்கே My Account க்குச் சென்று Edit Interest Categories என்பதைச் சொடுக்கவும்.
அதில் உள்ள விருப்பங்களில் 25 ஐ மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். இங்கே நான் குறிப்பிட்டுள்ள வகைகளைத் தேர்வு செய்தால் அதிகமான விளம்பர மின்னஞ்சல்களைப் பெறலாம்.
" Business To Business" என்ற தலைப்பில் உள்ள அனைத்தையும் தேர்வு (Tick) செய்யவும்.
"Money & Employment" என்ற தலைப்பில் உள்ள அனைத்தையும் தேர்வு (Tick) செய்யவும்.
"Computing & Internet" என்ற தலைப்பில் உள்ள அனைத்தையும் தேர்வு (Tick) செய்யவும்.
25 விருப்பங்களுக்குள் வர மேலும் சிலவற்றைத் தேர்வு செய்யவும்.
மின்னஞ்சல் படிக்க காசு என்ற பதிப்பை படித்தேன். என்ன மின்னஞ்சல் வரும், நாம் படிப்பதால் அவர்களுக்கு என்ன லாபம்? மேலும் நம்க்கு காசு கொடுப்பதன் நோக்கம் என்ன? இதிலுள்ள வியாபார நடவடிக்கைகள் எனக்கு புரியவில்லையே.
மின்னஞ்சல் படிக்க காசு என்ற பதிப்பை படித்தேன். என்ன மின்னஞ்சல் வரும், நாம் படிப்பதால் அவர்களுக்கு என்ன லாபம்? மேலும் நம்க்கு காசு கொடுப்பதன் நோக்கம் என்ன? இதிலுள்ள வியாபார நடவடிக்கைகள் எனக்கு புரியவில்லையே.
கருவை கலியமூர்த்தியின் மறுமொழிகளுக்கு நன்றிகள்.
//என்ன மின்னஞ்சல் வரும், நாம் படிப்பதால் அவர்களுக்கு என்ன லாபம்? மேலும் நம்க்கு காசு கொடுப்பதன் நோக்கம் என்ன? இதிலுள்ள வியாபார நடவடிக்கைகள் எனக்கு புரியவில்லையே. //
வேறு ஒன்றுமில்லை வெறும் விளம்பரம் தான். அதாவது தங்கள் இணையதளத்தை பிரபலப் படுத்த விரும்புபவர்கள் இவ்வாறான ஒரு குறிப்பிட்ட தொகையையும் விளம்பரத்தையும் கொடுத்து அதை அனைவருக்கும் அறிவிக்கச் சொல்வார்கள். அதை அவர்கள் பெற்றுக்கொண்டு தங்களிடம் உள்ள உறுப்பினர்களின் (நாம் தான்) மின்னஞ்சலுக்கு அனுப்பி வைப்பார்கள். அவ்வாறு வரும் விளம்பரங்கள் தான் நமக்கு காசு கொடுக்கும் மின்னஞ்சலாக வரும். விளம்பரதாரரிடம் பெற்ற பணத்தில் நமக்கு சிறிது தொகையைத் தருவார்கள். என்னதான் இருந்தாலும் அவ்வாறு வரும் விளம்பர மின்னஞ்சல்கள் கவர்ச்சி வார்த்தைகளைக் கொண்டு வருவதால் விளம்பரதாரருக்கு சிறிது கூட நட்டம் ஏற்படாது.
இணையதளங்களில் இருக்கும் எழுத்து மற்றும் தட்டி விளம்பரங்களைக் காட்டிலும் இது மிகவும் வலிமையானது. ஏனென்றால் நம்முடைய மின்னஞ்சல் பெட்டிக்கே வந்து தகவலைத் தருகிறது. நம்மவர்கள் சிலர் மின்னஞ்சல் பெட்டியை விட்டு வெளியே வரமாட்டார்கள் என்பது அனைவரும் தெரிந்த ஒன்றே.