மக்களை ஏமாற்றும் BSNL லும் அதன் குதிரை(...!) வேகமும்..!

இந்தியாவை தன்னுடைய கம்பிகளாலும் காற்றலைகளாலும் மற்ற நாடுகளுடன் இணைக்கும் ஒரே அரசுத்துறை நிறுவனம் தான் இந்த BSNL.

உண்மையில் தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சிக்குப் பின்பே இந்தியாவால் மற்ற நாடுகளுடன் (சில துறைகளில் மட்டும் தான்) போட்டி போடும் அளவிற்கு வந்துள்ளது.

இந்தத் துறையின் BSNL தான் இந்தியாவெங்கும் தொலைப்பேசி முதல் இணைய இணைப்பு வரை வழங்கி வருகிறார்கள். இவர்க்ளோடு சில தனியார் துறையினரும் இந்தச் சேவையை வழங்கி வருகிறார்கள்.

இப்போது பிரச்சணையே இந்த BSNL ன் இணைய இணைப்புத்தான்.

SancharNet, DataOne, NetOne என்ற பெயர்களில் இணைய இணைப்பை தங்களுடய வாடிக்கையாளர்களுக்கு BSNL வழங்கி வருகிறது.

சென்ற நாட்களில் இவர்கள் DataOne என்ற (Broad Band Internet Connection) அகன்ற அலைவரிசை கொண்ட சேவையை புதிதாகத் தொடங்கினார்கள். இச்சேவை தொடங்கப் பட்டபோதே நிறைய குழப்பங்கள். அதாவது சீனாவில் வேண்டாம் என்று தூக்கி எரியப்பட்ட "செப்பு கம்பி முறை" யைப் பின்பற்றி இவர்கள் இங்கே அகன்ற அலைவரிசைக்கு பூஜை போட்டார்கள். அதுவும் இது நகரங்களில் மட்டுமெ இந்தச் சேவையைப் பெற முடியும். ஆனால் இச்சேவையை வாங்கிய அனைவருக்கு பெரிய ஏமாற்றாம் தான் மிஞ்சியது. அகன்ற அலைவரிசை என்று வழங்கப்பட்ட இச்சேவை குறுகிய சேவையாக மாறியதுடன் மட்டுமல்லாமல் அடிக்கடி இணைப்பு துண்டிக்கப் பட்டு எரிச்சலை அடையச் செய்தது.

இந்த DataOne என்ற (Broad Band Internet Connection) அகன்ற அலைவரிசை கிடைக்கப் பெறாதவர்கள் (கிராமங்களில் உள்ளவர்கள்) SancharNet மற்றும் NetOne என்ற சேவையைப் பெற்றுக் கொள்ளலாம். இச்சேவை வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது தந்து கொண்டு இருக்கிறது. BSNL ன் தரைவழி இணைப்பு உள்ளவர்கள் இந்த 2 சேவைகளையும் பெற முடியும். இதில் SancharNet என்பது Pre Paid முறையாகும். NetOne என்பது Post Paid முறையாகும்.

SancharNet என்பதில் ரூபாய். 280 முதல் 500 வரை உள்ள 50 மணி மற்றும் 100 மணி நேர அட்டைகள் உள்ளன. இதில் ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களைத் தவிர மற்ற நாட்களில் இணைய இணைப்பு செய்தால் அந்த மணித்துளிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படும். அப்போது ஒரு நிமிடத்திற்கு 1 ரூபாய் என்று கட்டணம் நம்முடைய தொலைப்பேசி கட்டணத்தில் ஏறிவிடும். அப்படி 1 மணிநேரம் இணைய இணைப்பில் இருந்தால் 60 ரூபாய். ஆனால் வருகிற இணைய வேகமோ 28 KBs மட்டும் தான்.

இந்த இணைய இணைப்பை வைத்துக் கொண்டு சாதாரணமாக உங்களுக்கு வந்திருக்கிற 1 மின்னஞ்சலைப் படிக்க உங்களுக்கு கிட்டத்தட்ட 7 நிமிடங்கள் பிடிக்கும். அதைப் படிக்க மட்டும் தான் 7 நிமிடங்கள். அதற்கு நீங்கள் பதில் கடிதம் வேறு அனுப்புவீர்கள். அப்படி என்றால் தொலைப்பேசிக் கட்டணம் எவ்வளவு வரும் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

இதே போலத்தான் NetOne என்ற முறையும். இதில் நேர அட்டைகள் வாங்கத் தேவையில்லை. நேரடியாக தொலைப்பெசி வழியாக இணைய இணைப்பைப் பெறலாம். இங்கே 1 நிமிடத்திற்கு 10 பைசா என்று தொலைப்பேசி கட்டணம் ஏறும். வேகமோ அதே 28 KBs மட்டும் தான். அதிலும் இந்த 2 முறைகளும் இணைய இணைபில் இருந்தால், அப்போது நமக்கு வரவேண்டிய தொலைப்பெசி அழைப்புகளும் வராது.

இந்த மவுஸ் எரிச்சலில் (வயிற்று எரிச்சல் இல்லை) யாரோ ஒரு நபர் தன்னுடைய வ.பதிவில் இந்தியாவெங்கும் 2010 ல் இலவசமாகவே 2 MBs வேகத்தில் இணைய இணைப்பு தரப் போகிறார்க்ள் என்று ஒரு பதிவு போட்டிருந்தார். தயவு செய்து அந்த மாதிரி மட்டும் கணவு கண்டு விடாதீர்கள். கட்டணச் சேவைக்கே 28KB தான் தர முடிகிறது. அப்படியிருக்க இந்தியாவெங்கும் எனும் போது சாத்தியமில்லை.

அப்படியே BSNL அலுவலகத்தை தொடர்பு கொண்டால் சில நெரங்களில் அவர்கள் தந்திருக்கும் எண்ணுக்கு அழைப்பு போகாது அல்லது போனாலும் அதற்கு பதிலே இருக்காது.

தனியார் நிறுவனங்கள் எப்படி...?

இவர்கள் மட்டும் யோக்கியம் இல்லை. இவர்கள் மகா திருடர்கள். அடிக்கடி இணைய இணைப்பு துண்டிக்கப் படுவது என்பது இங்கே சகஜம். அதற்கு இவர்களின் வாடிக்கையாளர் சேவைமையத்தைத் (Customer Care) தொடர்பு கொண்டால் மறுமுணையில் ஒரு பெண் பேசுவார்.

"இப்ப சரி செய்துடறோம் சார். வெயிட் பண்ணுங்க. "

என்று அந்தப் பொண்ணு பேசும். உடனே நம்மாளு தன்னுடைய கெத்த காண்பிக்க ஏதாவது பேசிவிட்டு தொலைப்பேசியை வைத்துவிடுவார். அவ்வளவுதான் அவருக்கு இனிமேல் இணைய இணைப்பு துண்டிக்கப் பட்டால் ரொம்ப சந்தோசம்.

இப்படித்தான் 50% வாடிக்கையாளர் சேவைமையங்கள் மக்களை ஏமாற்றவே ஏற்படுத்தப் பட்டுள்ளன. இது தான் தனியார் நிறுவனங்களின் தந்திரம். 30% Call Center களில் இந்த மக்களை ஏமாற்றும் வேலை தான் நடக்கிறது.

இந்தப் பிரச்சணையால் பாதிக்கப் பட்டவர்கள் நிச்சயமாக அதிகம் பேர் இருப்பீர்கள். மறந்துவிடாமல் உங்கள் (ஆதங்கங்களை) கருத்துக்களை (Comments) இங்கே விட்டுச்செல்லுங்கள்.

தமிழ் நாடு BSNL தொலைத்தொட்ர்பு வட்டத்திற்குச் செல்ல : http://tamilnadu.bsnl.co.in/

BSNL NetOne ன் ஏமாற்று விளம்பரத்தைப் பார்க்க: http://tamilnadu.bsnl.co.in/cbtnetone.htm

13 மறுமொழிகள்:

  • Anonymous said...
     

    //...இந்தப் பிரச்சணையால் பாதிக்கப் பட்டவர்கள் நிச்சயமாக அதிகம் பேர் இருப்பீர்கள். மறந்துவிடாமல் உங்கள் (ஆதங்கங்களை) கருத்துக்களை (Comments) இங்கே விட்டுச்செல்லுங்கள்...//

    Let me be the First to register my anguish against Tata Indicom's VSNL. Lot's to say but refraining as planning to approach Consumer forum for redressal.

  • வடுவூர் குமார் said...
     

    BSNL எப்பவோ தூக்கிட்டேன்.
    TATA Indicom காலை வேளைகளில் சாதுர்யமாக மெதுவாக வேலை செய்கிறது இல்லை மறுக்கிறது.
    யாராவது புதுசா செய்தா தேவலை.
    DMK/ADMk என்று மாறி மாறி போவதே வெறுப்பாக இருக்கு.

  • ✪சிந்தாநதி said...
     

    sancharnet இணைப்பில் இருந்த போது இப்படித்தான் பயங்கரமாக வெறுப்பேற்றிக் கொண்டு இருந்தது. ஆனால் இப்போது அகலப் பட்டை வசதி வந்த பிறகு சேவை பரவாயில்லை என்று தான் சொல்ல வேண்டும். மாதத்தில் ஓரிரு நாட்கள் சில தடைகள் இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை பொதுவாக நல்ல சேவை கிடைக்கிறது.

  • PSV said...
     

    நான் இந்தக் கட்டுரையில் சிறிய மாற்றங்கள் செய்த பிறகு வெளியிடலாம் என்று இருந்தேன் ஆல்பர்ட். அதற்குள் வெளியிட்டு விட்டீர்கள். பரவாயில்லை.

  • PSV said...
     

    அடையாளம் தெரியாத நபரின் மறுமொழிக்கு நன்றிகள்.

  • PSV said...
     

    சிந்தாநதி அவர்களே, நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் Sancharnet போன்றவைகள் மக்களை ஏமாற்றுகிறது என்பது மறுப்பதற்கில்லை. அதற்கு உங்கள் மறுமொழியெ சாட்சி.

  • PSV said...
     

    வடுவூர் குமாருக்கு நன்றிகள். புதுசா செய்யனும்னா நாம இந்தியாவுல இருக்கக் கூடாது. இந்தியாவ விட்டு ஓடிப் போயிடறது நல்லது. அப்படி ஓடிப் போயிட்டம்னாலும் நமக்கு NRI ன்னு பட்டம் சூட்ட ரெடியா இருகாங்க.

  • ✪சிந்தாநதி said...
     

    //Sancharnet போன்றவைகள் மக்களை ஏமாற்றுகிறது// ஏமாற்றுவதாக தோன்றவில்லை. சேவைக்குறைபாடு இருக்கலாம். அது பழைய இணைப்புகளின் காரணமாக ஏற்படும் தொழில்நுட்ப குறைபாடு. ஒரு அரசுத்துறை நிறுவனம் இந்த அளவுக்கு வளர்ச்சி கண்டு இன்று ஓரளவு மேம்பட்ட அகலப் பட்டை இணைப்பை தருவதே பெரிய விஷயம். தனியார் நிஇறுவனங்கள் எதுவும் பிஎஸ்என்எல் அளவுக்கு கூட தரமான சேவை தருவதாக இல்லை என்பதை பார்க்கும் போது அத்தனை தூரம் நம்பிக்கை இழக்க அவசியம் இல்லை.

    சில இடங்களில் உள்ள தொழில் நுட்ப பிரச்சினைகள் தீர்க்கப் பட்டு அனைத்து பகுதிகளிலும் அகலப் பட்டை வசதி தரப் படும் போது நிலைமை சீர்ப்படும்.

  • PSV said...
     

    சிந்தாநதி அவர்களுக்கு,

    நீங்கள் சொல்வது போல் மக்களை ஏமாற்றவில்லை எனலாம். ஆனால் ஒன்றுக்கும் பயனற்ற அந்த பழைய முறையை வைத்து என்ன நன்மை? அங்கே தொழிழ் நுட்ப குறைபாடுகள் காரணமில்லை. அவர்கள் கொடுத்திருக்கும் இணைப்பு எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களிடம் சரியான வேகம் கொண்ட Server கிடையாது. அதுதான் காரணம்.

    //ஒரு அரசுத்துறை நிறுவனம் இந்த அளவுக்கு வளர்ச்சி கண்டு இன்று ஓரளவு மேம்பட்ட அகலப் பட்டை இணைப்பை தருவதே பெரிய விஷயம். தனியார் நிஇறுவனங்கள் எதுவும் பிஎஸ்என்எல் அளவுக்கு கூட தரமான சேவை தருவதாக இல்லை என்பதை பார்க்கும் போது அத்தனை தூரம் நம்பிக்கை இழக்க அவசியம் இல்லை.//

    நீங்கள் சொல்லும் அகலப் பட்டை இணைப்பு நகரத்தில் மட்டுமே கிடைக்கிறது. கிராமங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் அரசுத் துறை நிறுவனங்களைவிட தனியார் நிறுவனமான ரிலையன்ஸ், டாடா இண்டிகாம் மற்றும் ஹட்ச் போன்றவைகள் Wireless இணைப்பை இந்தியாவின் மூலை முடுகெல்லாம் தருகிறதே. இப்படிக்கும் நிதி மூலதனம் தனியார் நிறுவனங்களை விட BSNL அதிகமாகவே உள்ளது. அதை வைத்தே இந்த வீணாப் போன Sancharnet ஐ தூக்கி எறிந்து விட்டு BSNL லும் Wireless சேவையைத் தரலாமே.

    //சில இடங்களில் உள்ள தொழில் நுட்ப பிரச்சினைகள் தீர்க்கப் பட்டு அனைத்து பகுதிகளிலும் அகலப் பட்டை வசதி தரப் படும் போது நிலைமை சீர்ப்படும்.//

    ம்ம்.. வாய்ப்பே இல்லை. BSNL லிடம் Customer Support டே கிடையாது. அப்படி இருந்தாலும் ஆமை வேகம் தான்.

  • வடுவூர் குமார் said...
     

    நாங்க இங்கிருந்து அங்கு வரலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது நீங்கள் இங்கு வரலாமா என்று யோசிகிறீர்கள்.
    வாருங்கள்.

  • PSV said...
     

    வடுவூர் குமாருக்கு நன்றிகள்.

    //
    நாங்க இங்கிருந்து அங்கு வரலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது நீங்கள் இங்கு வரலாமா என்று யோசிகிறீர்கள்.
    வாருங்கள். //
    இல்லை. வரமாட்டோம். போனால் செவ்வாய் கிரகத்திற்கு போவோமே தவிர தாய் நாட்டை விட்டு வரமாட்டோம்.

  • Anonymous said...
     

    இப்படியொரு பதிவதான் யாராவது போடமாட்டாங்களான்னு பாத்துக்கிட்டு இருந்தேன். நானும் கிட்டத்தட்ட 8 மாசமா இந்த BSNL BroadBand பயன்படுத்துறேன். ஒரு மாசம் கூட உருப்படியா வேலையே செஞ்சதில்ல. அதுவும் இந்த மே மாசத்துல கிட்டத்தட்ட 15 நாளா (இன்னும் சரியாகுல) பல இணையதள்ங்கள் திறக்கரதே இல்ல. எங்க போய் சொல்லியும் ஒன்னும் பிரயோஜனமே இல்ல. விரைவில் http://techintamil.org ல் இதைப்பற்றிய ஒரு கட்டுரையை எழுத உள்ளேன்.

  • PSV said...
     

    நன்றி http://techintamil.org.

    விரைவில் இது ஒரு பதிவை எதிர்பார்க்கிறோம். ஏனென்றால் நாம் சும்மா இருக்க இருக்க நம்மை ஏமாளியாக ஆக்கிவிடுவார்கள் இந்த BSNL காரங்க. வாங்க சீக்கிரமா உங்க மவுஸ் எரிச்சலை கொட்டித் தீர்த்திடுங்க.

    உங்களோட அனுபவத்தையாவது சிலர் புரிஞ்சு அதை உண்மை என்று நம்பட்டும்.