ஆரம்பிச்சுட்டாங்க புதிய தொழில்நுட்பம். ஆனால் இது பீட்டாதான் (சோதனைப்பதிப்பு) இன்னும் மேட்டாவாகவில்லை.
நாம் அனவருமே இலவசத்தில் இ.இதழ் நடத்துவதால் இதில் பீட்டா, மேட்டா பறிறி நாம் கவலைப்பட்த் தேவையில்லை.
***http://beta.blogger.com என்ற முகவரியில் தான் அதில் நுழையலாம்.
***இதற்கு முக்கியமாக ஜிமெயில் கணக்கு வைத்திருக்க வேண்டும்.
***ஏற்கனவே ப்ளாக்கர் கணக்கு வைத்திருப்பவர்கள் அதை உங்களுடைய ஜிமெயில் கணக்கின் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து புதிய ப்ளக்கர் கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம்.
***அவ்வாறு ஜிமெயில் கணக்கு இல்லாதவர்கள் இதன் மூலமாக Create new account என்ற தொடுப்பை சொடுக்கி புதிய கணக்கிற்கு மாறிக்கொள்ளலாம்.
***அவ்வாறு மாறியவர்கள் இதன்பிறகு உங்களுடைய ஜிமெயில் கணக்கின் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்துதான் உள்ளே செல்ல முடியும்.
சிறப்பம்சங்கள்:
###முன்னர்போல் எந்த மாற்றங்கள் செய்தாலும் save செய்துவிட்டு பிறகு Rebublish செய்யத்தேவையில்லை. Save செய்தாலே அது publish ஆகிவிடும். ( Instant publishing)
###அனைத்து கணக்குகளையும் ஒரே இடத்தில் மேலாண்மை செய்வதற்கு எளிமையான "கட்டுப்பாட்டு அறை" (Dash Board) தந்திருக்கிறார்கள்.
###மேலும் புதிய அடைப்பலகைகள் (templates).
###தகவல் திரட்டுவதற்கு திரட்டியில் மேம்பாடு.
###இன்னும் நிறைய மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. அதை இங்கே சென்று பாருங்கள்
ஆபத்து அம்சங்கள்:
எச்சரிக்கை: அடைப்பலகையில் மாற்றம் செய்திருப்பவர்கள் (என்னை மாதிரி) இந்த சேவைக்கு மாறுவது உங்கள் வலைப்பதிவையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடும். (நான் அவ்வாறு மாறிய பிறகு என்னுடைய பதிவு ஒரு புதிய வடிவத்தில் மேலும் கீழும் போயிருந்தது. அதன்பிறகு அதன் கூகிள் மன்றத்தில் போய் report செய்தும் பயனில்லை. அதன்பிறகு நானே திரும்பவும் அடைப்பலைகையை திரும்பவும் திருத்த வேண்டியிருந்தது.
அதனால் மிகவும் எச்சரிக்கயாக இருங்கள்.
ஏனெனில் வலைப்பதிவுகளில் இருப்பவை சாதாரண விசயம் இல்லை.
உங்களுடையதும் என்னுடையதுமான கைவண்ணம்.
அரசின் கருவூலத்தைவிட மிகவும் பாதுகாக்கப் படவேண்டியது.
புதிய உலகத்திற்கு வர வாழ்த்துக்கள்.....
நான் அவஸ்தைப் பட்டாகி விட்டது.
என்னுடைய 69 பதிவுகளையும்(போஸ்ட்ஸ்) (?) தேடிக் கொண்டு இருக்கிறேன்.
என் வலைப்பதிவை பீட்டா ஆக்குவதாக நினைத்துக் கொண்டு
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டியாய் இன்று இருக்கிறேன்.நன்றி. இந்தப் பதிவுக்கு.
||அடைப்பலகை மாற்றம் வைத்து இருப்பவர்கள்//
பீட்டா போய் என் ஒரிஜினல்
பதிவைத் தேடிக் கொண்டு இருக்கிறேன்.
என் 69 போஸ்ட்டையும் எங்கே தேடுவேன்/
தேவையா எனக்கு?
நன்றி ஐய்யா இப்போது இந்தப் பதிவைப் போட்டதுக்கு.
என்ன கேட்டாலும் ஜிமெயில் ஐடியில் போய் நின்று விடுகிறது.
எல்லொரையும்--அதாவது என்னை மாதிரி tech (non) savvy amateurs:-))
களுக்கு உபயோகமாக இருக்கும். புலம்புவதற்கு அனுமதித்த உங்களுக்கு நன்றி.