இலவச இணையவங்கி (அனுப்ப-பெற)

இணையத்தில் இனிமேல் பணம் அனுப்புவதற்கும் பெறுவதற்கும் உங்களுடைய கடன் அட்டை (Credit Card) விவரங்களை இனிமெல் தரத்தேவையில்லை. இந்த இணையதளத்தின் மூலமாக ஒரு இணைய வங்கி கணக்கை நிறுவினாலே போதும். அது இலவசம் தான்.

சிறப்பம்சங்கள்:

  • பாதுகாப்பு ரொம்ப அதிகம்.
  • இணையத் திருடர்களை நெருங்க விடாமல் பாதுகாப்பதில் Paypal-க்கு எதிராகத் தொடங்கப்பட்ட ஒரே நிறுவனம்.
  • Credit Card/Debit Card விவரங்களைத் தரத்தேவையில்லை.
  • நமது சொந்த நாணய மதிப்பிலே (ரூபாய்) பணத்தை அனுப்பவும் பெறவும் பெறவும் முடியும்.
  • mobile மூலமாகவும் Transaction செய்யும் வசதி.
  • Shopping & Services என்பதின் மூலமாக நேரடியாக Shopping செய்யலாம்.

தொடங்குவது எப்படி?

கீழ்வரும் இந்த இணைப்பையோ அல்லது படத்தையோ சொடுக்கி வரும் window-ல் Sign Up என்ற இணைப்பை சொடுக்கி தேவையான விவரங்களை கொடுக்க வேண்டியது தான்.


இங்கே தான் கவனமாக இருக்க வேண்டும்.

அதாவது உங்களுடைய E mail முகவரி சரியானதாக இருக்க வேண்டும்.

மேலும் Country என்பதில் India எனத் தேர்ந்தெடுத்துவிட்டு Currency என்பதில் INR எனபதைத் தேர்ந்தெடுக்கும் போது இந்திய ரூபாயில் கணக்கை நிறுவலாம்.

மெலும் E mail Verification அனுப்பிய விவரம் தெரிந்தவுடன் உடனே உங்கள் inbox-ஐத் திறந்து கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பைத் சொடுக்கி விடுங்கள். இப்போது மற்ற விவரங்களைக் கொடுத்து Confirm செய்துகொள்ளுங்கள்.

அதன்பிறகு உங்களுக்கு ஒரு E mail அனுப்பவார்கள். அதைப் படித்து விடுவது நல்லது.

மேலும் My account >>> upload funds என்ற பகுதிக்கு வந்துவிட்டு Bank transfer என்பதை தேர்வு செய்தால் உங்கள் local bank-மூலமாக transfer செய்ய வேண்டிய அவர்களுடைய வங்கி விவரங்களைத் தருவார்கள். அதைக் குறித்துக் கொண்டு அதன்படி transfer செய்துவிடுங்கள்.

அவ்வளவுதான். சரி create செய்தவர்கள் எனக்கும் கொஞ்சம் பணம் அனுப்புவீர்களா?

4 மறுமொழிகள்:

  • Anonymous said...
     

    நீங்க பயன் படுத்திட்டுத்தான் சொல்றீங்களா? இல்ல நாங்க ட்ரான்ஸ்பர் பண்ரது நேரடியா உங்களுக்கே வருதா?

    :))

  • Anonymous said...
     

    நான் அனுபியுள்ளேன் தங்களுக்கும் பணம்

  • Anonymous said...
     

    Hi
    Its very nice to see a "tech" blog in tamil. Congrats.

    Iravu Kazhuku

  • Albert said...
     

    Iravu Kazhuku -க்கு நன்றி.
    ENNAR -அவர்கள் அனுப்பியதாகச் சொல்லும் பணம் இன்னும் வரவில்லை. எப்படி அனுப்பினீரகள்? உங்களுக்கு என்னுடைய ஐடி தெரியாதே?! அல்லது வேறு எதுவும் வழிகள் உள்ளதா எனப் பார்த்துச் சொல்லவும்.

    --அண்ணன் Alex பயப்படரமாதிரி நான் ஒன்றும் "இந்திய இணையத் திருடன்" இல்லை. அது எப்படி எனக்கு வரும் என்று தெரியவில்லை. நீங்கள் நினைப்பது மாதிரி என்னிடம் ஒன்றும் பெரிய அளவில் திறமைகள் இல்லை. திறமைன்னா? வேறு ஒன்றும் இல்லை. ஏற்கனவே நமது தமிழகத்தில் ஒரு வங்கியின் ஏடிஎம்-ற்கு ---ப் எழுதியவர் கடைசியாக முடிக்கும் போது ஒவ்வொருவரும் பணம் டெ-- பண்ணியவுடன் நேரடியாக தன்னுடைய வங்கிக் கணக்கிற்கு அதிலிருந்து 10 பைசா வருவது மாதிரி எழுதிவிட்டார். அவ்வாறு அவர் சுமார் 100000 -ஐ நெருங்கும் போது பிடிபட்டார். ஆனால் அது திறமையாகக் கருதப்பட்டு ஒரு பிரபலமான கணிப்பொறி நிறுவனம் அவரை அதிக வருமானத்தில் வேலைக்கு அமர்த்திவிட்டது. இது தான் திறமையின் கதை. அதனால் இதில் சதி ஒன்றும் இல்லை.
    மற்றபடி உங்களுடைய மறுமொழிகளுக்கு நன்றி.


    நீங்க பயன் படுத்திட்டுத்தான் சொல்றீங்களா? இல்ல நாங்க ட்ரான்ஸ்பர் பண்ரது நேரடியா உங்களுக்கே வருதா?