பீட்டா நன்மை + திமைகள் பாகம் 2:

எச்சரிக்கை:

தயவுசெய்து தமிழ் வலைப்பதிவாளர்கள் ப்ளாக்கரின் பீட்டா கணக்கிற்கு மாறிவிடாதீர்கள். ஏனெனெனில்,

***அது கொடுக்கும் திரட்டியை நமது தமிழ்மணம் ஏற்றுக் கொள்ளாது. அதாவது புதிய பீட்டாவின் திரட்டியில் (RSS Feed) புதிய வசதிகள் updatd செய்யப் பட்டிருப்பதால் அதனை தமிழ்மணம் ஏற்றுக் கொள்ளாமல்,


"மன்னிக்கவும்! உங்கள் பதிவை புதுப்பிக்க இயலவில்லை.உங்கள்
செய்தியோடையில் பிழையிருக்க வாய்ப்புள்ளது.
உங்கள் செய்தியோடையைச் சோதிக்கவும்பிழையிருப்பின்
அதை சரி செய்தபின் அளிக்கவும்"


என்று மேல்கண்டவாறு கூறும். அதன்பிறகு நீங்கள் தமிழ்மணத்தில் உங்கள் பதிவுகளை திரட்ட முடியாது.

***தமிழ்மணத்தில் திரட்டமுடியவில்லையென்றால் பதிவுகள் எழுதி பயனில்லை.


(தமிழ்மணம் நிர்வாகிகள் இதைக் கருத்தில் கொண்டு தங்கள்
தளத்தில் ப்ளாக்கரின் புதிய வசதிகளை ஏற்றுக்க் கொள்வார்களா?. அது அனைவருக்குமே
நலமாக இருக்கும்)




ஏற்கனவே மாறியவர்களுக்கு,

***கவலைப்பட வேண்டாம். நமக்காக முகுந்தராஜ் தமிழ்வலைப்பதிகள்.தளம்(www.tamilblogs.com) வலைப்பதிவு செய்தி திரட்டியை தமிழ்மணம் போலவே ஆரம்பித்துள்ளார். அங்கே சென்று உங்கள் பதிவுகளை அளிக்கவும். ஒரு முறை அளித்துவிட்டாலே போதும் மற்றபடி புதிய பதிவுகள் அளிக்கும் போதெல்லாம் போய் புதிப்பிக்கத் தேவையில்லை. அதுவாகவே புதுப்பிக்கப்படும்.


***தேன்கூட்டில் புதிய பீட்டாவின் திரட்டி நன்றாகவே வேலை செய்கிறது.

நற்செய்திகள் வழங்க வாழ்த்துக்கள்.

0 மறுமொழிகள்: