வலைப்பூ வண்ணமயமாக இலவச கருவிகள்

சில நேரங்களில் நாம் நினைத்தவாறு நமது வலைப்பதிவுகளின் அடைப்பலகைகள் (Templates) அமைவதில்லை. ஆனால் அதை நாம் வண்ணமயமாக மாற்றி அமைக்கலாம். நமது வலைப்பதிவின் தொடுப்புகளின் நிறத்தை மாற்றி அமைக்கலாம். மேலும் வலைப்பதிவின் பின்புறத்தையும் மாற்றி அமைக்கலாம். அதற்கு ISDN*tek என்ற நிறுவனத்தினர் Rainbow Color Browser என்ற ஒரு செயலியை வழங்குகின்றனர். அதில் நமக்குத் தேவையான வண்ணத்தை தேர்வு செய்த பிறகு அதன் குறிமுறையும் copy செய்து கொள்ளலாம். பிறகு அதன் குறிமுறையை Template பகுதியில் தேவையான இடத்தில் ஒட்டி நிறங்களை மாற்றலாம். அவ்வாறு செய்த பிறகு preview பார்த்த பின்பு பதிக்கவும். அதன் மாதிரி வடிவம்.

Rainbow palette

உதாரணமாக என்னுடைய வலைப்பதிவைப் பாருங்கள். புதிய வார்ப்புகள் தந்த இந்த படையப்பா அடைப்பலகையை இவ்வாறு மாற்றி உள்ளேன்.

மேலும் இவ்வலை தளத்தினர் பல இலவச கருவிகளைத் தருகின்றனர். இவ்வலைக்குச் செல்ல இங்கே சொடுக்கவும். Click here to visit this site

2 மறுமொழிகள்:

  • Anonymous said...
     

    உங்களுடைய பதிவுக்கும் ஆர்வமான முயற்சிக்கும் நன்றிகள். நானும் ஓய்வு கிடைக்கும்போது இவ்வாறு வலைவடிவமைப்பில் ஈடுபடுவதுண்டு.

    தொடர்ந்து பதியுங்கள்.

  • Anonymous said...
     

    Good blog!!

    Keep up good work!!!