நுட்பங்கள் அனைத்தும் தமிழில்

நிறைய வலைப்பதிவாளர்களால் ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பதிவுகளை நிறுவகிக்க முடியாது. இதுநாள் வரையில் அப்படித்தான் நானும் இருந்தேன்.
ஆனால் இப்போது வகைப்படுதுதல் வரிசையாக பதிவுகள் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த "முதல் தமிழ்" வலைப்பதிவை தொடங்குகிறேன்.
ஏனென்றால் எவ்வளவு நாள் தான் "சருகு" வில் சருகுகளைக் காப்போம் என்று சொல்லிவிட்டு மற்றவற்றை எழுதுவது.
அதனால் தான் புதிதாக "அறிவியல் நுட்பம்" தொடர்பான பதிவுகளை இங்கே பதியவிருக்கிறேன். கண்டிப்பகாக இவ்வுலகின் அறிவியல் நுட்பங்கள் அனைத்தும் தமிழில் கொண்டு வர வேண்டும் அதன் மூலமாக நமது தமிழ் பெருமையடைய வேண்டும். இத்தளத்திற்கு அடைப்பலகை தந்து உதவிய "புதிய வார்ப்புகள்" அவர்களுக்கு எனது நன்றிகள்.

---ஆல்பர்ட்

5 மறுமொழிகள்:

  • Anonymous said...
     

    புதிதாக "அறிவியல் நுட்பம்" தொடர்பான பதிவுகளை இங்கே பதியவிருக்கிறேன். கண்டிப்பகாக இவ்வுலகின் அறிவியல் நுட்பங்கள் அனைத்தும் தமிழில் கொண்டு வர வேண்டும் அதன் மூலமாக நமது தமிழ் பெருமையடைய வேண்டும். இத்தளத்திற்கு அடைப்பலகை தந்து உதவிய "புதிய வார்ப்புகள்" அவர்களுக்கு எனது நன்றிகள்.

    ---ஆல்பர்ட்

    மரியாதைக்குரிய ஆல்பர்ட் அவர்களுக்கு,(அன்புக்குரிய என்று எழுத நினைத்தேன்.
    அனைத்தும் தமிழில் கொண்டு வர வேண்டும் அதன் மூலமாக நமது தமிழ் பெருமையடைய வேண்டும்.- இந்த வரிகள் உங்கள் மேல் அன்புடன் மரியாதையையும் கொண்டுவந்துவிட்டது.)
    ஐயா ஆல்பர்ட் உங்களைப்பற்றி அறிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

    ssdavid63@yahoo.com

    எண்ணம் ஈடேற என் வாழ்த்துகள்.

  • Anonymous said...
     

    வாழ்த்துக்கள்.

  • Albert said...
     

    முனைவர் இறையரசன் மற்றும் காசி அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    முனைவர் இறையரசன் அவர்களுக்கு...
    எனக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டாம். உங்களுடைய மரியாதைக்கு
    உங்களுடைய இந்த மறுமொழிகளே போதும்.

    கண்டிப்பாக தமிழ் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும்.
    அதற்கு நான் மட்டுமில்லை. இங்கே (தமிழ் வலைப்பதிவுகளில்)எழுதுகிறவர்
    கள் அனைவரும் நம்முடைய
    கருத்தை நமது தாய் மொழியில் சொல்ல வேண்டும் என்பதற்காகத் தான் தமிழில்
    வலைப் பதிக்கின்றனர். இங்கே நான் முழு நேரமும் வலைப்பதிவுகளில் ஈடு
    படுவதில்லை. எனெனில் தற்போதுதான் 3 ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்துள்ளேன்.கிடைக்கிற சில மணித்துளிகளில் நடந்து
    வரும் 40.0 kb இணைய வேகத்தில் அப்பாவுக்கு phone bill ஐ ஏற்றி விட்டு
    ஏதாவது எழுதுவேன். அல்லது உலாவி மையங்கள் செல்லும் போது வந்திருக்கு மறு
    மொழிகளை பதித்துவிடுவேன்.
    இன்னும் நான் தண்டச் சோறுதான். இன்னும் மேல் படிப்புகள் வேறு படிக்க
    வேண்டி இருக்கிறது. அதன் பிற்கு அதாவது வேலை கிடைத்த பிற்கு இதை
    பகுதி நேரமாக மிகப் பெரிய அளவில் செய்ய ஆவல்.(மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்)
    மற்றபடி பதிவுகளில் சந்திப்போம்...

  • Anonymous said...
     

    ஆல்பர்ட் உங்களது முயற்சி வெற்றிபெற நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    தமிழுக்கு இதுதான் இன்றைய தேவை! தமிழ் அறிவியல் மொழியாக உயர்த்தப்பட வேண்டும். அந்த வகையில் உங்களது பணி சிறக்கட்டும்.

  • Anonymous said...
     

    வாழ்த்துக்கள் நண்பரே!

    நீங்கள் வயதில் சின்னவராக இருப்பினும், உங்கள் சிந்தனை பெரியது. உங்கள் முயற்சி திருவினையாக்கட்டும்.
    நன்றி!