Firefox இனை பயன்படுத்தி பழகிவிட்டால் மறுபடி IE பயன்படுத்துவதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. (இது புரிந்துதானோ என்னவோ மைக்ரோசொப்ட் Forefox இனை அப்படியே ஈயடிச்சான் காப்பி அடித்து IE7 ஆக வெளியிடுகிறது) லினக்சில் கூட Epiphany ஓரளவு மாற்றாக இருந்தாலும் அதுவும் கூட மொசில்லா அடிக்கட்டுமானத்திலேயே இயங்குகிறது.
எழிலூட்டம் செய்யப்பட்ட (குறிப்பாக Justify) தமிழ் தளங்களை பார்வையிடும்போது Mozilla குடும்ப உலாவிகள் எழுத்துக்களை குதறிப்போட்டுவிடுகின்றன. வின்டோஸ் காரர்கள் என்றால் பரவாயில்லை அந்த பக்கங்களை மட்டும் IE இல் பார்த்துவிடலாம் அல்லது IE tab நீட்சியை நிறுவி சமாளிக்கலாம். லினக்ஸ்காரர்களுக்கு வழியில்லை. அநேகமாக லினக்ஸின் எல்லா உலாவிகளும் மொசில்லா அடிக்கட்டுமானத்தில்தான் இயங்குகின்றன். கான்கரரில் கூட இதே பிரச்சனை இருக்கிறது. என்னசெய்வது?
இன்றைக்கு காலை மின்னஞ்சல்கள் பார்க்கும்போது தமிழ்லினிக்ஸ் மடலாடற்குழுமத்திலிருந்து வந்த மடல் ஒன்று இதற்கான தீர்வை சொல்கிறது.அநேகமாக இந்த பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படும் தமிழ் வலைப்பதிவாளர்களுடன் அந்த தீர்வை பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்து இந்த பதிவை இடுகிறேன்.
(இக்குறிப்புக்கள் யாவும் சரவணனின் ஆங்கில வலைப்பதிவிலிருந்து எடுக்கப்பட்டவை)
- 1. firefox உலாவியை திறந்துவைத்துக்கொள்ளுங்கள்
- 2. இந்த நீட்சியை நிறுவிக்கொள்ளுங்கள்
- 3. உலாவியை மூடி திரும்ப திறந்துவைத்துக்கொள்ளுங்கள்
- 4. இந்த பக்கத்தை திறந்துவைத்துக்கொள்ளுங்கள்
- 5. tools -> new user script என்பதை தெரிவு செய்யுங்கள். திறந்துவைத்திருக்கும் பக்கத்திலுள்ள நிரல் நிறுவப்பட்டு வெற்றிச்செய்தி காண்பிக்கப்படும்.
- 6. firefox இனை மீள ஆரம்பித்து பக்கத்தை திறந்தீர்களானால் எழுத்துக்கள் அழகாக தெரியும். எந்த பிரச்சனையும் இல்லை. (உலாவியின்கீழ்பட்டையில் உள்ள சிரிக்கும் குரங்கு உருவம் சிரித்துக்கொண்டிருக்கிறதா என்பதை கவனியுங்கள்)
- 7. இப்பொழுது புதிய பிரச்சனை எல்லா வலைத்தளங்களின் எழிலூட்டங்களும் மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் உங்களுக்கு சில குறிப்பிட்ட தளங்களுக்கு மட்டுமே இம்மாற்றத்தை செய்யவேண்டும். என்னசெய்வது?
- 8. tools -> manage user scripts என்பதை தெரிவு செய்யுங்கள்
- 9. http* ftp* என இருக்கும் தெரிவுகளை எல்லாம் நீக்கிவிட்டு நீங்கள் பார்க்கவிரும்பும் வலைப்பக்க முகவரியை சேர்த்துக்கொள்ளுங்கள்.
- 10 குறித்த வலைத்தளத்தின் எல்லா பக்கங்களுக்கும் இவ்வசதி வேண்டுமானால், வலைத்தளத்தின் முதன்மை முகவரியை இட்டு அதன் முடிவில் நட்சத்திரக்குறி இடவேண்டும். எடுத்துக்காட்டாக, http://tamilbasic.blogspot.com/*
இந்த வார தமிழ்மணம் நட்சத்திரத்தின் வலைப்பதிவை எப்படி சரியாக்கிப்பார்த்தேன் என்பதை படங்களில் பார்த்துக்கொள்ளுங்கள்.
இது ஏற்கனவே பதியப்பட்ட கட்டுரையாகும். அவை சுடப்பட்டு இங்கு
பொரிக்கப்பட்டுள்ளது.சுட்ட இடம் : http://tamilgnu.blogspot.com/2006/09/firefox.html
மிக்க நன்றி. நீண்ட நாள் தொல்லை தீர்ந்தது.
தங்களின் இப்பதிவு எமக்கு மிக்க உதவியாய் உள்ளது. நன்றிகள் உரித்தாகட்டும்.
சிவகுமார் மற்றும் ச.இலங்கேஸ்வரன் அவர்களின் மறுமொழிகளுக்கு நன்றிகள்.
//Firefox இனை பயன்படுத்தி பழகிவிட்டால் மறுபடி IE பயன்படுத்துவதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது.//
ரிப்பீட்டே!!!