தமிழ் ஃபயர்ஃபாக்ஸின் சோதனைப்பதிப்பு 2 ....

அணைவருக்கும் வணக்கம். என்னுடைய வலைப்பதிவான http://logesh.wordpress.com ஒரு சில காரணங்களால் தடைசெய்யப்பட்டுவிட்டது. (என்னுடைய புதிய ஆங்கில வலைப்பதிவை இங்கே காணலாம் : http://thooral.info/blog/logesh/) எனவே புதியதாக மீண்டும் ஒரு வலைப்பதிவை தொடங்கி தமிழ்வலைப்பதிவுகள், தமிழ் மணம் போன்றவற்றில் இணைப்பதாக இல்லை. எனவேதான் நமது ஆல்பர்டுடன் இணைந்து அவரது பதிவிலேயே என்னுடைய படைப்புகளையும் போடலாம் என முடிவுசெய்துள்ளேன். சர் விசயத்திற்கு வருவோம். கடந்த 14- ஆம் தேதி ஆல்பர்ட் அவர்கள் என்னுடைய ஃபயர்ஃபாக்ஸிற்கான மொழிபெயர்ப்பை இங்கு அறிவித்திருந்தார். இன்னும் வேலைகள் முழுமையாக முடியாத்தால் நான் முதலில் என்னுடைய படைப்பை Portable Firefox யை கொண்டே வெளியிட்டிருந்தேன். ஏனென்றால் இதனை சோதிக்கும்பொழுது கணினியில் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் ஃபயர்ஃபாக்ஸிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதே. ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த சோதனைப்பதிப்பில் பல வார்த்தைகள் மொழிபெயர்க்கப்படாமல் இருந்தன. இப்பொழுது கிட்டத்தட்ட முழுமைப்பெற்றுவிட்டது. தமிழ் ஃபயர்ஃபாக்ஸ் சோதனைப்பதிப்பு 2 ஐ இனி http://tamilfirefox.com தளத்திலிருந்து பதிவிறக்க ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது. மேலும் தானாக நிறுவிக்கொள்ளக்கூடிய மொழிப் பொட்டலத்தை உருவாக்குவதே என்னுடைய அடுத்த எண்ணம். இதனை எப்படி எளிமையாக செய்வது என்று அறிந்தவர்கள் உதவினால் வேலை மிக விரைவில் முடிக்கப்பட்டுவிடும். நன்றி....

0 மறுமொழிகள்: