ஆப்பு அடிச்சிட்டாங்க....!

ஆமாங்க. இது எதிர்பார்த்தது தான். தமிழ் இணைய தளங்களில் காசு சம்பாதிக்க ஒரு விளம்பர நிறுவனத்தை (விட்ஜெட்பக்ஸ்) ஏற்கனவே இங்கு அறிமுகப் படுத்தியிருந்தேன். அவங்க தான் இப்போ மிகவும் பிரபலமாகி பிரச்சணை செய்ய ஆரம்பிச்சுட்டாங்க.

விசயம் இது தான். அவரகள் தங்களுடைய விதிமுறைகளை புதிதாக மாற்றி உள்ளார்கள். காரணம் அவர்கள் தங்களை நம்பி வந்த விளம்பரதாரர்களுக்கு அதிக பலன் கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.


அவர்களின் மாற்றப் பட்ட விதிமுறை:


  • ஆங்கிலம் தவிர மற்ற மொழி தளங்கள் தற்போது ஏற்றுக் கொள்ளப் படாது.

  • அவ்வாறு முன்னர் பதிவு செய்தவர்கள் தங்கள் தளத்தில் இட்டுள்ள விளம்பரங்களை நீக்கிவிட வேண்டும். இல்லையென்றால் அவரது கணக்கு நீக்கப்படும்.


இவ்வாறு ஏதாவது ஒரு மாற்றம் நடைபெறும் என்று தான் இங்கு பதியும் முன்னரே அவர்களிடம் மின்னஞ்சல் அனுப்பி கேட்டேன். அவர்கள் அப்போது எந்த நிபந்தனையும் இல்லை என்று கூறி இருந்தாரகள். அதன் பிறகு அந்த நிபத்தனை மாற்றத்திற்குப் பிறகு அதே மின்னஞ்சலில் பதில் எழுதி காரணம் கேட்டேன். அதற்கு கீழ்வருமாறு பதில் எழுதியிருந்தாரகள்.


Thank you for contacting us.

As you saw, we have recently changed our policy regarding sites that areprimarily non-English. Because our data analysis was showing a very lowlikelihood of conversion-to-sale from those sites, we are no longerapproving any non-English language sites. Please see our blog post forfull details:http://widgetbucks.blogspot.com/2007/10/widgetbucks-updates-policy-on-non.html.

Please remove any widgets and referral banners you may already have placed.

We have a responsibility to deliver quality traffic to the mostlyU.S.-based merchants in our network. We have several strict filters andaudits that help insure the traffic delivered has a high likelihood ofconversion to sale. This is also one of the reasons for several of ourpolicies in the terms of service.

Thank you for your understanding.

WidgetBucks Help Team.


அதனால தமிழ் வலைப்பதிவர்கள் இதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தெரியாதவர்களுக்கு சொல்லி விடுங்கள்.

மாற்று வழி என்ன?

கண்டிப்பாக இதற்கு மாற்று வழி தேவைதான். அனைத்து மொழியையும் ஆதரிக்கும் விளம்பர நிறுவனங்களை சோதித்து வருகிறேன். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அது இங்கு வெளிட்யிடப் படும்.

இப்ப ஒன்னும் மோசம் போயிடல புதுசா ஒரு ஆங்கில வ. பதிவைத் தொடங்கி அதில விட்ஜெட்பக்ஸ் விளம்பரங்களைச் சேர்த்து காசு சம்பாதிக்கலாம். நாம் மாறித்தான் ஆக‌னும். என்ன‌ செய்யுற‌து.

Use WidgetBucks for your English Speaking Sites.

Non-Englsih sites is not allowed.

2 மறுமொழிகள்:

  • Anonymous said...
     

    how to get a paypal account? a im from india.and also i need more details about this post.please help me regarding this.
    please mail me to kamalidas@in.com
    thanks in advance

  • Albert said...
     

    வணக்கம், காளிதாஸ், விரைவில் எவ்வாறு paypal கணக்கு தொடங்குவது பற்றிய கட்டுரையை இங்கு எழுதுவேன். அதனால் தொரந்து கவனித்து வரவும்.